செங்கல்பட்டு மாவட் டம் திருப்போரூர், திருக்கழுக் குன்றம் வட்டங்களுக்குட்பட்ட கிரா மங்களில் கொடிவகை பயி ரான தர்ப்பூசணி, பூசணிக்காய், வெள்ளரி, கிர்னி பழம் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டி லும் இந்த ஆண்டு பருவமழை சரியான விகிதத்தில் பெய்த தால் அனைத்து கொடி வகை பயிர்களும் நல்ல விளைச் சலை தந்தது.
மேலும் இப்பகுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காய் சுமார் 200 ஏக்க ருக்கு மேல் பயிரிடப்பட்டுள் ளது. இந்த பூசணிக்காய் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஒருவரும் வர முடியவில்லை.
அதேபோல் கோயம்பேடு காய்கனி அங்காடியும் மூடப் பட்டதால் உள்ளுர் வியாபாரி களும் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் காலத்தில் அறுவடை செய்ய முடியவில்லை. பச்சை நிறத்தில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டிய பூசணிக்காய் தற்போது மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்யவில்லை என்றால் சுருங்கி எடை குறைந்து அழுகி நாசம் அடைந்து விடும்.
ஏக்கருக்கு 15 முதல் 20 ஆயி ரம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு செலவு செய்த காசு கூட கைக்கு வராத நிலை ஏற்பட்டிருக்கிறது. வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ள தால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகிறார்கள். அரசே நேரடியாக கொள் முதல் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் நிவார ணம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-க.பார்த்திபன்